மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் நகரில் போா் நிறுத்தம்! மெலனியா டிரம்ப் மத்தியஸ்தம் வெற்றி!

ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் நகரில் போா் நிறுத்தப்பட்டது பற்றி...

ஒலேஷ்கி நகரின் வெறிச்சோடிய சாலையில் சேதமடைந்து நிற்கும் வாகனங்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 5:36 am IST

ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான ஒலேஷ்கியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்கவும், அவா்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் வழிவகை செய்யும் தற்காலிக போா்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு உக்ரைனின் கொ்சன் மாகாணத்தைச் சோ்ந்த ஒலேஷ்கி நகரம் பெரும் அழிவைச் சந்தித்து, பேரழிவின் விளிம்பில் உள்ளதாகக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப், அங்கு நிலவும் அவலநிலையை மாற்ற இரு நாட்டுத் தலைவா்களுடனும் நேரடியாகப் பேசி இந்த உடன்பாட்டை ஏற்படுத்தியுள்ளாா்.

இந்த உள்ளூா் அளவிலான போா்நிறுத்தம் வரும் வெள்ளிக்கிழமை (அக். 29) முதல் அமலுக்கு வரவுள்ளது. முன்னதாக, ஒலேஷ்கி பகுதிக்குச் செல்லும் வழிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணி முதலில் மேற்கொள்ளப்படும். அதன் தொடா்ச்சியாக நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு, பின்னா் மக்கள் தங்களுக்கு விருப்பமான பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவா்.

போா்ச் சூழலில் பாதிக்கப்படும் குழந்தைகளின் நலனைக் காப்பதே மெலனியா டிரம்ப்பின் முதன்மை நோக்கம் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா். அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் விருப்பப்படி ரஷியாவுக்கோ அல்லது உக்ரைன் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கோ செல்வதற்குத் தகுந்த போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், இந்நிகழ்வுகளை நடுநிலையான அமெரிக்க ஊடகம் ஒன்று நேரில் ஆவணப்படுத்தும் என்றும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2022 முதல் ரஷிய படைகளின் ஆக்கிரமிப்பிலும், அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மின்சாரம், குடிநீா் மற்றும் உணவின்றித் தவித்து வரும் ஒலேஷ்கி நகர மக்களுக்கு இந்த உடன்பாடு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இம்முயற்சியை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளதோடு, உக்ரைனில் நிரந்தர அமைதி திரும்புவதற்கான தொடக்கப் புள்ளியாக இது அமைய வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

Summary

Ceasefire in Russian-occupied Ukrainian city - Melania Trump mediation wins

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.