மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கற்பனையல்ல நிஜம்! 24 காரட் தங்கத்தினாலான உலகின் முதல் நடைபாதை! எங்கே?

உலகிலேயே முதல்முறையாக 24 காரட் தங்கத்தினாலான நடைபாதை திறக்கப்படவுள்ளது குறித்து...

படம் - செய்யறிவு

Published On :28 அக்டோபர் 2026, 6:47 pm IST

உலகிலேயே முதல்முறையாக துபையில் 24 காரட் தங்கத்தினாலான நடைபாதை திறக்கப்படவுள்ளது.

துபையின் தெய்ரா பகுதியில் உள்ள துபை தங்க மாவட்டம் (துபை கோல்டு டிஸ்ட்ரிக்ட்) என்ற இடத்தில் இந்த நடைபாதை அமையவுள்ளது.

உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் துபையில் ஆபரணங்களாக அல்லாமல் முதலீடு என்ற அடிப்படையில் சுத்தத் தங்கமாக வாங்கும்போது, வரி கிடையாது. ஆபரணமாக வாங்கினால் 5 சதவிகித வரி விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பல நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, துபையில் தங்கம் விலை குறைவு. எனவே, அங்கு தங்கம் வாங்க பயணியர் உள்பட முதலீட்டாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது உண்டு.

இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதத்தில் துபை தங்க மாவட்டம் தொடங்கப்பட்டது. அங்கு, தங்கம், நகைகள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள் போன்ற பொருள்களை விற்கும் 1,000க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள் உள்ளன.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் துபை தங்க மாவட்டத்தில் உலகிலேயே முதன்முறையாக மிக நீளமான, 24 காரட் சுத்தத் தங்கத்திலான நடைபாதையை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நடைபாதையானது இன்னும் இரண்டு மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

For the first time in the world, a walkway made of 24-karat gold is set to be opened in Dubai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.