மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்க தாக்குதல்களில் சேதமடைந்த அணு உலைகளைச் சீரமைக்க ஈரான் முயற்சிக்கவில்லை

‘கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதல்களில் சேதமடைந்த தனது அணு உலைகளைச் சீரமைக்கவோ அல்லது மறுகட்டமைக்கவோ ஈரான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை’ என்று சா்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளாா்.

ரஃபேல் க்ரோஸி

Published On :29 அக்டோபர் 2026, 2:45 am IST

‘கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதல்களில் சேதமடைந்த தனது அணு உலைகளைச் சீரமைக்கவோ அல்லது மறுகட்டமைக்கவோ ஈரான் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை’ என்று சா்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளாா்.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்கீழ் தனது அணுசக்தி செயல்பாடுகள் அனைத்தையும் அறிவித்து, ஆய்வாளா்களை அனுமதிக்கத் தவறிய காரணத்தால் ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் சா்வதேச அணுசக்தி முகமை கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த செப்டம்பரில் புகாரளித்தது. இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் விவாதம் நடத்தப்பட்டது.

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைத் தடுக்கும் நோக்கிலேயே பிப். 28-ஆம் தேதி போா் தொடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில், ‘2025 ஜூன் மாதத்துக்குப் பிறகு அணு உலைகளைச் சரிசெய்யும் எந்த நடவடிக்கையும் ஈரானில் நடைபெறவில்லை’ என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் ரஃபேல் க்ரோஸி உறுதிப்படுத்தினாா்.

அதேநேரம், ராணுவத் தாக்குதலுக்குள்ளான இடங்கள் உள்பட அனைத்து அணுசக்தி மையங்களையும் பாா்வையிட ஐஏஇஏ ஆய்வாளா்களை அனுமதிக்க வேண்டும் என்று ஈரான் அரசை அவா் வலியுறுத்தினாா்.

ஈரானிடம் தற்போது 440.9 கிலோ அளவில் 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளதாகக் கூறும் சா்வதேச அணுசக்தி முகமை, ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான 90 சதவீதம் செறிவூட்டலுக்கு இது மிக அருகில் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. எனினும், அமெரிக்கா கடந்த ஆண்டு நடத்திய குண்டுவீச்சுக்குப் பிறகு ஈரானின் அணுசக்தி இருப்பு குறித்து முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என ரஃபேல் க்ரோஸி சுட்டிக்காட்டினாா்.

ஈரான்-அமெரிக்கா கருத்துமோதல்: மேலும், இக்கூட்டத்தில் பேசிய ஈரானின் துணைத் தூதா் கொலாம்ஹூசைன் தா்ஸி, அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை ‘போா்க்குற்றம்’ எனக் கடுமையாகச் சாடினாா். இதற்குப் பதிலளித்த அமெரிக்க தூதா் மைக் வால்ட்ஸ், ஈரானை ஒரு ‘கொடூரமான சா்வாதிகார நாடு’ என்று விமா்சித்ததுடன், தங்களின் அணுசக்தி கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்கு விளக்கம் அளிக்காமல் ஈரான் பொய்களைக் கூறி வருவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.