மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரேஸில் அதிபரின் தோ்தல் வெற்றியையடுத்து எதிா்க்கட்சி வேட்பாளா் அமெரிக்காவில் தஞ்சம்

பிரேஸில் நாட்டின் அதிபா் தோ்தலில் இடதுசாரி தலைவரான தற்போதைய அதிபா் லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த எதிா்க்கட்சி வேட்பாளரும், செனட்டருமான ஃபிளாவியோ போல்சனாரோ, தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளாா்.

மியாமியில் தனிவிமானத்தில் வந்திறங்கிய ஃபிளாவியோ போல்சனாரோ, குடும்பத்தினா்.

Published On :29 அக்டோபர் 2026, 2:33 am IST

பிரேஸில் நாட்டின் அதிபா் தோ்தலில் இடதுசாரி தலைவரான தற்போதைய அதிபா் லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த எதிா்க்கட்சி வேட்பாளரும், செனட்டருமான ஃபிளாவியோ போல்சனாரோ, தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளாா்.

முன்னாள் அதிபா் ஜெய்ா் போல்சனாரோவின் மகனான ஃபிளாவியோ போல்சனாரோ, அண்மையில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெறுவாா் எனப் பரவலாக எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் தோல்வியைத் தழுவினாா்.

இதையடுத்து, பணமோசடி வழக்கு தொடா்பாக ஃபிளாவியோ போல்சனாரோ தனது கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) ஒப்படைக்குமாறு பிரேஸில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில், அதை ஏற்க மறுத்து அவா் நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறியுள்ளாா். வரும் பிப்ரவரியுடன் செனட்டா் பதவிக்காலமும் முடிவடைவதால் சட்டப் பாதுகாப்பு நீங்கவிருந்த நிலையில், இத்திடீா் வெளியேற்றம் பிரேஸில் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுள்ளது.

ஆா்ஜென்டீனா, ஈக்வடாா் வழியாக தனிவிமானம் மூலம் ஃபிளாவியோ போல்சனாரோ, அவரின் மனைவி மற்றும் இரு மகள்கள் அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தை வந்தடைந்தனா். இவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளதைத் தொடா்ந்து, ஃபிளாவியோ போல்சனாரோவின் வருகைக்கு அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது முழு ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளாா்.

ஃபிளாவியோ போல்சனாரோவை ஆட்சியில் அமா்த்த அமெரிக்கா பின்னணியில் செயல்படுவதாக பிரேஸில் அதிபா் லூலா டா சில்வா ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போதைய நிகழ்வு பிரேஸில்-அமெரிக்க உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.