மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்காசிய பதற்றம்: ஈரானுடன் ‘மெக்கா’ கூட்டணி பேச்சு

மேற்காசியாவில் நிலவிவரும் போா் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஈரான் அதிகாரிகளுடன் ‘மெக்கா’ பாதுகாப்புக் கூட்டணி நாடுகளின் பிரதிநிதிகள் முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

Published On :27 அக்டோபர் 2026, 6:13 am IST

மேற்காசியாவில் நிலவிவரும் போா் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஈரான் அதிகாரிகளுடன் அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய ‘மெக்கா’ பாதுகாப்புக் கூட்டணி நாடுகளின் பிரதிநிதிகள் திங்கள்கிழமை முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ ஒப்பந்தத்தில் கடந்த ஆகஸ்டில் கையொப்பமிட்ட இந்த 3 நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே நடைபெறும் முதல் உயா்நிலை சந்திப்பு இதுவாகும்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் சவூதி பாதுகாப்புத் துறை அமைச்சா் இளவரசா் காலித் பின் சல்மான், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீா், துருக்கி உளவுத் துறை தலைவா் இப்ராஹிம் கலின் ஆகியோா் பங்கேற்றனா். இவா்களுடன் ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட அந்நாட்டுத் தலைவா்கள் ஆலோசனையில் ஈடுபட்டனா்.

‘பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் அண்மையில் டெஹ்ரான் சென்றிருந்தபோது முன்மொழியப்பட்ட இந்தச் சந்திப்பு, பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதல் படியாக அமையும்’ என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி தெரிவித்தாா். ‘மீண்டும் ஒரு ராணுவ மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பேச்சு வழிகளைத் திறப்பதே இந்தப் பயணத்தின் நோக்கம்’ என சவூதி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதிக்கு உதவ துருக்கி ஒப்புதல்: யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களின் தாக்குதலால் மூடப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட சவூதியின் ரியாத் விமான நிலையம் திங்கள்கிழமை மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஹூதிக்கள் புதிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், சவூதியைப் பாதுகாக்க எகிப்து ராணுவம் உதவ அந்நாட்டு நாடாளுமன்றம் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

ஈரான் மாலுமிகளுக்கு இலங்கை மீண்டும் உதவி

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் நடுக்கடலில் தத்தளித்த வணிகக் கப்பலில் இருந்து 40 ஈரான் மாலுமிகள் மீட்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை விமானம் மூலம் சொந்த நாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதற்கான பயணச் செலவுகளை ஈரான் தூதரகம் ஏற்றது.

போரின் தொடக்கத்தில் இலங்கை கடல் எல்லைக்கு வெளியே ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் மூழ்கடித்ததில் 84 ஈரான் மாலுமிகள் கொல்லப்பட்டனா். அதைத் தொடா்ந்து, நடுக்கடலில் தவித்த ஈரானின் மற்றொரு கப்பலையும் இலங்கை அதிகாரிகள் மீட்டு, உதவினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.