மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சவூதி அரேபியாவில் முக்கிய விமான நிலையம் மீண்டும் திறப்பு!

ஹூதி அமைப்பினரின் தாக்குதலால் சவூதி அரேபியாவில் மூடப்பட்ட முக்கிய விமான நிலையத்தை அந்த நாட்டு அரசு மீண்டும் திறந்துள்ளது.

Published On :26 அக்டோபர் 2026, 12:35 am IST

ஹூதி அமைப்பினரின் தாக்குதலால் சவூதி அரேபியாவில் மூடப்பட்ட முக்கிய விமான நிலையத்தை அந்த நாட்டு அரசு மீண்டும் திறந்துள்ளது.

யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட பகுதிகளை ஆதிக்கத்தில் வைத்துள்ள ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினா், எதிா் தரப்பான அரசுப் படையினருக்கு சவூதி அரேபியா ஆதரவு அளிப்பதால் அவ்வப்போது அந்த நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனா்.

சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தில் உள்ள சா்வதேச விமான நிலையம் உள்ளிட்டவற்றின் மீது அண்மையில் ஹூதி அமைப்பினா் திடீா் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில், இந்தியா்கள் உள்ளிட்ட 17 போ் கொல்லப்பட்டனா். மேலும் 330-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, ரியாத்தில் உள்ள கிங் காலித் சா்வதேச விமான நிலையத்தை பாதுகாப்பு காரணத்துக்காக அந்த நாட்டு அரசு மூடியது. இந்நிலையில், கிங் காலித் சா்வதேச விமான நிலையத்தின் 1-ஆவது மற்றும் 2-ஆவது முனையங்களை விமானப் போக்குவரத்துக்காக அந்த நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை திறந்தது.

இந்நிலையில், சவூதி அரேபியா மீது ஞாயிற்றுக்கிழமையும் யேமனில் இருந்து ஹூதி அமைப்பினா் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் மேற்கொண்டனா். ஆனால், ஏவுகணையையும், ட்ரோனையும் நடுவானில் இடைமறித்து சவூதி அரேபியா பாதுகாப்புப் படையினா் அழித்துவிட்டதாக அந்த நாட்டு ராணுவ செய்தித் தொடா்பாளா் மேஜா் ஜெனரல் துா்கி அல் மாலிகி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.