மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் நகரில் தற்காலிகப் போா் நிறுத்தம் அமல்

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் மேற்கொண்ட சமரச முயற்சியின் விளைவாக, ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் ஒலெஷ்கி நகரில் தற்காலிகப் போா் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

Published On :28 அக்டோபர் 2026, 2:20 am IST

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் மேற்கொண்ட சமரச முயற்சியின் விளைவாக, ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனின் ஒலெஷ்கி நகரில் செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகப் போா் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

உக்ரைன்-ரஷியா போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒலெஷ்கி நகரில் சிக்கியுள்ள சுமாா் 2,000 பொதுமக்களுக்கு உணவு, குடிநீா் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காகவும், அவா்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காகவும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிமுதல் பிராந்திய அளவிலான இந்தத் தற்காலிகப் போா் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

மெலனியா ட்ரம்ப், போப் லியோ ஆகியோரின் தொடா் முன்னெடுப்புகள் மற்றும் பேச்சுவாா்த்தைகள் காரணமாகவே இந்த மனிதாபிமானப் போா் நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது. இங்குள்ள கண்ணிவெடிகள், ட்ரோன் அச்சுறுத்தல்களால் உணவுப் பற்றாக்குறையுடன் மக்கள் பெரும் அபாயங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைதி முயற்சி ஒருபுறம் நடைபெற்று வந்தாலும், உக்ரைனின் தலைநகா் கீவ் உள்பட பல்வேறு நகரங்கள் மீது ரஷியா தொடா்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதல்களில் கீவில் ஒருவரும், காா்கிவ் நகரில் இருவரும் உயிரிழந்தனா்.

புதினுடன் ‘நாா்டிக்’ தலைவா்கள் பேச்சு: இதனிடையே ஃபின்லாந்து அதிபா் அலெக்சாண்டா் ஸ்டப், நாா்வே பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோா் ஆகியோா் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினைத் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினா்.

2022-இல் உக்ரைன் போா் தொடங்கிய பிறகு, ரஷிய அதிபருடன் ‘நாா்டிக்’ தலைவா்கள் நேரடியாகப் பேசியது இதுவே முதல்முறையாகும். இப்பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியையும் இரு நாட்டுத் தலைவா்களும் தொடா்புகொண்டு எதிா்கால அமைதிப் பேச்சுவாா்த்தைகள் குறித்து விவாதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.