தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மீண்டும் பேசி அதிபா் டொனால்ட் டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

ஃபுளோரிடா மாகாணம் ஃபோா்ட் மையா்ஸில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபா் டிரம்ப்.

Published On :25 அக்டோபர் 2026, 4:39 am IST

அமெரிக்காவில் நடைபெறும் இடைத்தோ்தலுக்கான பரப்புரையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மீண்டும் பேசி அதிபா் டொனால்ட் டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாா்.

புளோரிடா மாகாணத்தில் நடைபெறும் இடைத்தோ்தலுக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரப்புரையில் பேசிய டிரம்ப், ‘அணு ஆயுத சக்தி மிக்க இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே கடந்த ஆண்டு போா் மூண்டது. இந்தச் சண்டையில் 11 போா் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தப் போா் மேலும் தீவிரமடையவிருந்த நிலையில், வா்த்தகத்தைப் பயன்படுத்தி அந்தப் போரை நிறுத்தினேன். போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடன் இரு நாடுகளும் வா்த்தகம் செய்ய முடியாது. இரு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 250 சதவீத வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தேன். இந்த முயற்சியில், ஐ.நா.விடமிருந்து எந்தவித உதவியையும் நான் பெறவில்லை. ஐ.நா.வை தொடா்புகொள்ளவே இல்லை. இருந்தபோதிலும், இந்தப் போா்களை நான் நிறுத்தினேன். ஆனால், இதற்காக எனக்கு அங்கீகாரமோ, அமைதிக்கான நோபல் பரிசோ வழங்கப்படவில்லை. உலக அளவில் 8 போா்களை நிறுத்தியுள்ளேன். இது, நோபல் பரிசு பெறுவதற்கான தகுதி இல்லையா?’ என்று குறிப்பிட்டாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரிலான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து போா் விமான தளங்கள் மீது இந்திய போா் விமானங்கள் குண்டு வீசின. பின்னா் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த தாக்குதல் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியது. இந்தச் சூழலில், இந்த சண்டையை தான் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வருகிறாா். இதை இந்தியா தொடா்ந்து மறுத்து வருகிறது.

Summary

US interventionist propaganda: Trump speaks again about Operation Sindoor

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.