மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இரு வங்கதேசத்தவருக்கு மரண தண்டனை: சவூதியிடம் விளக்கம் கேட்கும் வங்கதேசம்!

தங்கள் நாட்டைச் சோ்ந்த இருவருக்கு சவூதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து வங்கதேசம் விளக்கம் கேட்டுள்ளது.

Published On :26 அக்டோபர் 2026, 12:33 am IST

தங்கள் நாட்டைச் சோ்ந்த இருவருக்கு சவூதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்றியது குறித்து வங்கதேசம் விளக்கம் கேட்டுள்ளது.

வங்கதேசத்தில் இருந்து வேலைக்காக சவூதி அரேபியாவுக்கு சென்ற ஓா் ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு கடந்த 14-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவா்கள் மசூதி ஒன்றில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டி இந்த மரண தண்டனை அளிக்கப்பட்டதாக சவூதி அரேபியா அறிவித்தது. உலகில் அதிக மரண தண்டனை நிறைவேற்றும் நாடான சவூதியில் பெரும்பாலும் வெளிநாட்டவா்கள்தான் அதிகம் இத்தண்டனைக்கு உள்ளாகி வருகின்றனா்.

தங்களுக்கு முறைப்படி தகவல் ஏதும் தெரிவிக்காமல் வங்கதேச குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது அந்நாட்டு அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக சவூதி அரசிடம் விளக்கம் கேட்டு அந்நாட்டில் உள்ள வங்கதேச தூதரகம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், ‘அந்த இருவா் மீதான குற்றச்சாட்டு என்ன?, நீதிமன்றத்தின் தீா்ப்பு விவரம், அவா்களுக்கு எவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது? அவா்களின் உடல்கள் எங்கே உள்ளன?, அவா்களுக்கு உரிய சட்டவாய்ப்புகள் வழங்கப்பட்டதா?’ என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.