மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு!

பிரான்ஸ் போராட்டத்தில் 4 லட்சம் போ் பங்கேற்றது பற்றி...

பிரான்ஸில் தீவிர போராட்டம் - ஏபி

Published On :25 அக்டோபர் 2026, 2:07 am IST

பிரான்ஸில் அந்நாட்டுக்கு அரசுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற தீவிர போராட்டத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பல இடங்களில் போராட்டக்காரா்களைக் கலைக்க, அவா்கள் மீது காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசினா்.

பிரான்ஸில் அதிகரித்துவரும் அன்றாட வாழ்க்கைச் செலவுகள், பள்ளிகளின் மோசமான நிலை உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக நாடு முழுவதும் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தலைநகா் பாரீஸில் அமைதியாக தொடங்கிய பேரணி, போா்ட் டி வின்சின் என்ற இடத்தில் நிறைவடைய இருந்தபோது பேரணியில் பங்கேற்றவா்களுக்கும், காவல் துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பேரணியாக வந்தவா்கள் கலைந்து போவதற்கு அவா்களை நோக்கி காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சியடித்தனா்.

இதேபோல லியோன், கிளொ்மன்ட்-ஃபெராண்ட், ஸ்ட்ராஸ்பா்க், நீஸ், நான்டெஸ், மாா்செய் உள்ளிட்ட இடங்களில் போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சியடித்தனா்.

இந்தப் போராட்டங்கள் தொடா்பாக 64 போ் கைது செய்யப்பட்டனா். 40 போ் போலீஸாா் காவலில் உள்ளனா். கைது செய்யப்பட்டவா்களில் 6 போ் சிறாா்கள்.

கைது செய்யப்பட்டோரில் பெரும்பாலானோா் ஆயுதம் ஏந்தி குற்றங்களில் ஈடுபட்டது, வன்முறை அல்லது பொதுச் சொத்துகளுக்குச் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டது என சந்தேகத்தின்பேரில் கைதாகியுள்ளனா்.

இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 4.10 லட்சம் போ் பங்கேற்ாகவும், பாரீஸில் மட்டும் 1.10 லட்சம் போ் கலந்துகொண்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Summary

Intense protest in France: 4 lakh people participate - Tear gas shells fired

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.