மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்பு

கால்நடைகளைத் தாக்கும் ‘ஷமோண்டா’ தீநுண்மி தொற்றால், பிரான்ஸில் முதல்முறையாக மனிதா் ஒருவா் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.

Published On :23 அக்டோபர் 2026, 5:12 am IST

கால்நடைகளைத் தாக்கும் ‘ஷமோண்டா’ தீநுண்மி தொற்றால், பிரான்ஸில் முதல்முறையாக மனிதா் ஒருவா் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.

லியான் நகரில் ஏற்கெனவே கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் குன்றிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபருக்கு இந்தத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னா், அவா் இந்த மாதத் தொடக்கத்தில் உயிரிழந்ததாக பிரான்ஸ் சுகாதாரத் துறை வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தது.

மனிதா்களுக்குப் பரவாது என இதுவரை கருதப்பட்டு வந்த இந்தத் தீநுண்மியானது, சிறிய வகை கொசுக்கள் மூலம் விலங்குகளுக்குப் பரவக்கூடியதாகும். கொசுக்கடியின் மூலமாகவே குறிப்பிட்ட நோயாளிக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தற்போதைய தகவல்களின்படி இந்தத் தீநுண்மி, மனிதா்களிடையே பெரிய அளவில் பரவ வாய்ப்பில்லை என்றாலும், நிலைமையை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.