மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இன்னும் என்னவெல்லாம் நிகழுமோ? கடல்களின் நிறத்தையே மாற்றிவரும் சூப்பர் எல்நினோ!

உலகின் பெருங்கடல்களின் நிறத்தையே நீல நிறமாக மாற்றிவருகிறதாம் சூப்பர் எல்நினோ

Published On :22 அக்டோபர் 2026, 1:20 pm IST

மழைக் காலத்தில் கடுமையான வெய்யில், மழை பெய்தால், வானமே பொத்துக் கொண்டு பெய்வது போல ஒரு பேய் மழை என உலகையே ஆட்டிப்படைத்துவரும் சூப்பர் எல் நினோ நிகழ்வால், உலகின் பெருங்கடல்களின் நிறமே மாறி வருகிறதாம்.

சூப்பர் எல் நினோ உலகின் பெருங்கடல்களின் நிறத்தையே மாற்றி வருகிறது என்று நாசாவின் செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டில் பசிபிக் பகுதி செழிப்பான பச்சை நிறத்தில் இருந்த பெருங்கடல்கள், பிரகாசமான நீல நிறமாக மாறியிருக்கின்றன.

ஒளிச்சேர்க்கை செய்யும் பிளாங்க்டன்களுக்கு அவசியமான, குளிர்ச்சியான, ஊட்டச்சத்து நிறைந்த நீரை மேற்பரப்பிற்குக் கொண்டு செல்லும் நீரோட்டங்களை எல் நினோ குறுக்கிட்டு தடுத்துள்ளது.

இந்த பிளாங்க்டன்கள் தாங்கள் வாழும் பகுதிகளைக் கண்ணைக் கவரும் மரகதப் பச்சை நிறத்தில் வைத்திருக்கும். ஆனால் சூப்பர் எல் நினோ நீரோட்டங்களை பாதித்திருப்பதால் உணவு கிடைக்காமல், பிளாங்க்டன்கள் பட்டினியால் வாடுகின்றன. இதனால் பசிபிக் பெருங்கடல் உயிரற்று நீல நிறமாக மாறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2025 - ஆம் ஆண்டின் செயற்கைக்கோள் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ​​இந்தப் பகுதி எவ்வாறு, ஆண்டு முழுவதும் தக தகவென பச்சை நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது என்பதை காண முடிகிறது.

ஆனால், அந்த நிலை இப்போது இல்லை, அண்மைய தரவுகளின்படி, பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள கடல் பரப்பு நீல நிறமாக மாறியிருக்கிறது.

கடல் மேல் பரப்பில் இருக்கும் வெப்ப நிலையை வைத்து எல் நினோ கணக்கிடப்படும் நிலையில், தற்போது உருவான எல்நினோ முழுமையாக சந்திரமுகியாக அதாவது சூப்பர் எல் நினோவாக மாறியிருக்கிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்து, கடந்த மாதங்களில் சுட்டெரிக்கும் வெய்யிலும், ஒரு சில வாரங்களில் கொட்டும் மழையுமாக நாள்கள் சென்று கொண்டிருக்கின்றன.

எல் நினோ எனும் இயற்கையான அமைப்பு, ஒவ்வொரு இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு வெப்பமான எல் நினோ காலத்தை அல்லது ஒரு குளிர்ச்சியான லா நினோ கட்டத்தை உருவாக்கும். அதன் எதிரொலியாக உலகம் முழுவதும் தட்பவெப்ப நிலை மாறுபடும்.

தற்போது உருவாகியிருக்கும் எல் நினோ காலத்தில், ​​தென் அமெரிக்காவின் கடற்கரைக்கு அப்பால் உள்ள பசிபிக் பெருங்கடலின் நீர் சூடாகி, அதன் எதிரொலியாக சராசரி வெப்பநிலையை உயர்த்தி, உலகளாவிய வானிலை முறைகளைப் பாதித்து வருகிறது.

Summary

What else might happen? A 'super El Niño' is even changing the color of the oceans!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.