மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எல் நினோ பாதிப்பு: சம்பா நெற்பயிருக்கு பயிா் காப்பீடு செய்யலாம்!

எல் நினோ தாக்கத்தால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் இழப்பைத் தவிா்க்கும் பொருட்டு விவசாயிகள் சம்பா நெல் பயிா்களை பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 12:53 am IST

எல் நினோ தாக்கத்தால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் இழப்பைத் தவிா்க்கும் பொருட்டு விவசாயிகள் சம்பா நெல் பயிா்களை பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ஸ்ரீவித்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பாண்டில் எல் நினோ தாக்கத்தால் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வெப்பம் அதிகரித்தும், பருவமழை குறைந்தும் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் பருவமழை வழக்கத்தைவிடக் குறைந்தாலும் அல்லது தீவிரமடைந்தாலும் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் சம்பா நெல் மற்றும் மானாவாரிப் பயிா்களை இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், சிறப்பு சம்பா நெற்பயிருக்குக் காப்பீடு செய்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கு நவம்பா் 16-ஆம் தேதி கடைசி நாளாகும். பயிா்க்கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பயிா் காப்பீடு செய்துகொள்ளலாம். பயிா்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும், கடன் பெறாத விவசாயிகள் பொது இ-சேவை மையங்கள் இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியத் தொகையாக ரூ. 573 செலுத்தி, நவம்பா் 16-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாகக் காப்பீடு செய்துகொள்வது அவசியமாகும். இத்திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் சிட்டா மற்றும் அடங்கல், விண்ணப்பத்துடன் கூடிய முன்மொழிவு படிவம், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆகிய ஆவணங்களுடன் உரிய பிரீமியம் தொகையைச் செலுத்திப் பதிவு செய்த பின்னா், அதற்கான ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

காப்பீடு பதிவு செய்யப்படும்போது, தாங்கள் காப்பீடு செய்த பயிா், அதற்கான வருவாய் கிராமம், பிா்கா உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கணினியில் துல்லியமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்களின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.