மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாலத்தீவு - பாகிஸ்தான் இடையே 20 ஒப்பந்தங்கள்! இந்தியாவின் நிலை என்ன?

மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் இடையே 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன...

maldivies pakistan pact

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு - பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் - எக்ஸ்

Published On :22 அக்டோபர் 2026, 1:08 pm IST

மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் பாகிஸ்தான் பயணத்தில் இருநாடுகள் இடையே 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் நாட்டுக்குச் சென்றுள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் மாலத்தீவு அதிபர் ஒருவர் அந்நாட்டுக்கு முதல்முறையாகச் சென்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ஆகியோரை அவர் நேரில் சந்தித்து உரையாடினார்.

இந்தப் பயணத்தில், கடந்த புதன்கிழமை (அக். 21) மாலத்தீவு அதிபர் முய்சுவை பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் நேரில் சந்தித்து பாதுகாப்புத் துறையில் இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவு இடையில் உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்புகள் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான மாலத்தீவின் நீண்டகால கூட்டாளியான இந்தியா அந்நாட்டின் கடல்சார் கண்காணிப்பு, பாதுகாப்புப் பயிற்சிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் தொடர்ந்து உதவிகள் வழங்கி வந்தது. மேலும், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” எனும் வெளியுறவுக் கொள்கையில் மாலத்தீவு ஒரு சிறப்பு இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அண்டை நாடுகள் உடனான உறவுகளை இந்தியா மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாலத்தீவு அதிபரின் பாகிஸ்தான் பயணம் அமைந்துள்ளது.

இந்தப் பயணத்தில், மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு, கடல்சார் கண்காணிப்பு, செய்யறிவு (ஏஐ) உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

முன்னதாக, சௌதி அரேபியா, துருக்கி, இந்தோனேசியா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் உடன் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistani Army Chief Asim Munir and Maldivian President Mohamed Muizzu met in person and discussed security cooperation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.