கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கியூபா முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு அமெரிக்காவில் பிடியாணை! சீனா கண்டனம்!

கியூபா முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்துள்ளதற்கு சீனா கண்டனம்...

Former Cuban President Raul Castro

கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ - கோப்புப் படம் | AP

Published On :21 அக்டோபர் 2026, 4:28 pm IST

கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக அமெரிக்காவின் புளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்துள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

மறைந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரரும் கியூபாவின் முன்னாள் அதிபருமான ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக புளோரிடா மாகாண அரசு பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி கியூபா மக்கள் அந்நாட்டில் இருந்து தப்பித்து புளோரிடா செல்வதற்கு உதவிய “பிரதர்ஸ் டூ ரெஸ்க்யூ” எனும் அமைப்புக்குச் சொந்தமான 2 விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது தொடர்பாக ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், 95 வயதான கியூபா முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படுவதாக, புளோரிடாவின் அரசு வழக்குரைஞர் கடந்த திங்களன்று (அக். 19) அறிவித்தார்.

இந்த நிலையில், கம்யூனிஸ்ட் நாடான கியூபா உடன் நெருங்கிய உறவுகளைக் கடைபிடித்து வரும் சீன அரசு, முன்னாள் அதிபர் காஸ்ட்ரோவுக்கு எதிரான பிடியாணைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கியூபாவுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான அழுத்தங்களையும் அமெரிக்க அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றி, சீன வெளியுறவு அமைச்சகம் கூறுகையில்,

“கியூபா மீது அழுத்தம் கொடுக்க நீதித்துறை தவறாகப் பயன்படுத்தப்படுவதை சீன அரசு தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. கியூபாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், வெளிநாட்டு தலையீடுகளை எதிர்ப்பதற்கும் சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

கியூபா புரட்சியின் முக்கிய தலைவரான தோழர் ரவுல் சர்வதேச அளவில் மதிக்கப்படும் பெரும் தலைவர் ஆவார்” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் வலதுசாரி அரசு கியூபாவின் நெருங்கிய கூட்டாளியான வெனிசுவேலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவை கடத்தியதில் இருந்து இருதரப்புக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

China has condemned the arrest warrant issued by the US state of Florida against former Cuban President Raul Castro.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.