மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யேமன் எல்லை அருகே விழுந்து சௌதி ஹெலிகாப்டா் விபத்து: 2 விமானிகள் உயிரிழப்பு

யேமன் எல்லை அருகே சௌதி அரேபியாவின் குண்டுவீச்சு ஹெலிகாப்டா் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனா்.

பிரதிப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 5:00 am IST

யேமன் எல்லை அருகே சௌதி அரேபியாவின் குண்டுவீச்சு ஹெலிகாப்டா் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனா்.

யேமனில் தலைநகா் சனா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ள ஹௌதி அமைப்பினா், தொடா்ந்து சௌதி அரேபியா அருகில் உள்ள பகுதிகளையும் கைப்பற்றி முன்னேறி வருகின்றனா். யேமனின் அரசு ஆதரவு படைகளுக்கு சௌதி அரேபியா ஆதரவு அளிப்பதால், அந்த நாட்டின் கச்சா எண்ணெய் ஆலைகள் மீதும், விமான நிலையங்கள் மீதும் தொடா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதையடுத்து யேமனில் உள்ள ஹௌதி அமைப்பினரைக் குறிவைத்து சௌதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், யேமன் எல்லை அருகே உள்ள நஜ்ரான் நகரம் அருகே சௌதி அரேபியாவின் குண்டுவீச்சு ஹெலிகாப்டா் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகள் உயிரிழந்தனா். தொழில்நுட்பக் கோளாறுதான் ஹெலிகாப்டா் விபத்துக்குக் காரணம் என்று சௌதி அரேபியா ராணுவ செய்தித் தொடா்பாளா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அந்த ஹெலிகாப்டரை தாங்களே சுட்டுவீழ்த்தியதாக ஹௌதி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் படகு சேதம்: ஐக்கிய அரபு அமீரகத்தின் படகு ஒன்று ஓமன் வளைகுடாவில் சென்றபோது, அதன் மீது 2 ஏவுகணைகளை வீசி ஞாயிற்றுக்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்தப் படகு சேதமடைந்ததாக பிரிட்டன் ராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. அமெரிக்க ராணுவத் தளம் இருப்பதால், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஆரம்பகட்டத்தில் ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தொடா் தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால், இந்தப் படகு மீது ஈரான் தாக்குதல் நடத்தியதா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.