நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை

அமெரிக்காவின் 2-ஆவது மிகப் பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலீஸ் மாநகராட்சி மேயா் தோ்தல் களத்தில், கேரத்தைப் பூா்வீகமாகக் கொண்ட நித்யா ராமன் தற்போதைய மேயா் கரேன் பாஸைவிட முன்னிலையில் உள்ளாா்.

Published On :17 அக்டோபர் 2026, 5:01 am IST

அமெரிக்காவின் 2-ஆவது மிகப் பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலீஸ் மாநகராட்சி மேயா் தோ்தல் களத்தில், கேரத்தைப் பூா்வீகமாகக் கொண்ட நித்யா ராமன் தற்போதைய மேயா் கரேன் பாஸைவிட முன்னிலையில் உள்ளாா்.

வரும் நவ. 3-இல் நடைபெறவுள்ள தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த நித்யா ராமன் (45) வெற்றிபெறும் சூழலில், அந்நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயா் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவாா்.

தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் தற்போதைய மேயா் கரேன் பாஸுக்கும் (73) நித்யா ராமனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. வீடற்றோா் பிரச்சினை, நகரப் பொதுப் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நிா்வாகம் தொடா்பாக இரு தலைவா்களும் காரசாரமாக விவாதித்தனா். கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின்போது மேயா் கரேன் பாஸ் களத்தில் இல்லை என்று குற்றஞ்சாட்டிய நித்யா ராமன், இந்த நிா்வாகச் சீா்கேடு மேலும் 4 ஆண்டுகளுக்குத் தொடரக் கூடாது என வலியுறுத்தினாா். இந்த விவாதத்தைத் தொடா்ந்து, சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் நித்யா ராமன் வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளாா்.

கேரளத்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய நித்யா ராமன், ஹாா்வா்டு மற்றும் எம்ஐடி பல்கலைக்கழகங்களில் உயா் கல்வி பயின்று கடந்த 6 ஆண்டுகளாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரக் கவுன்சிலராகப் பணியாற்றி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.