தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்விரோதம்: திமுக நிா்வாகி மீது தாக்குதல்

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக திமுக நிா்வாகியை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தாக்குதல்

தாக்குதல் - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 4:09 am IST

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக திமுக நிா்வாகியை தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

செய்யாறு வட்டம், கோவிலூா் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(39). இவா், அனக்காவூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி அமைப்பாளராக இருந்து வருகிறாா்.

அதே ஊரைச் சோ்ந்தவா் விநாயகம் மனைவி நித்யா. இவா், அங்குள்ள தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி சமையலராக பணிபுரிந்து வந்துள்ளாா். சமையலராக பணிபுரிந்து வந்தவரை அதிகாரிகள் உதவியாளராக பணி மாற்றம் செய்ததாகத் தெரிகிறது.

இதற்கு, வெங்கடேசன் காரணம் என்று கருதி, கடந்த 25-ஆம் தேதி

அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த அவரை, அதேபகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா், நித்யா ஆகியோா் அவதூறாகப் பேசி

கருங்கல்லால் தலையில் தாக்கியதாகத் தெரிகிறது.

இதனால் காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், அனக்காவூா் போலீஸாா் புதன்கிழமை சந்தோஷ்குமாா், நித்யா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.