தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஏர்வாடி அருகே 3 பேருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது

முன்விரோதம் காரணமாக 3 பேருக்கு கத்திக்குத்து தொடர்பாக..

Ervadi

ஏர்வாடி காவல் நிலையம் - video crop

Published On :24 அக்டோபர் 2026, 11:49 am IST

ஏர்வாடி அருகே முன்விரோதம் காரணமாக 3 பேருக்குக் கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏர்வாடி அருகே உள்ள திருவரங்கநேரியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவரது மருமகன் இசை ராஜா. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வன்னியன் குடியிருப்பைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணிடம் பேசி பழகி வந்துள்ளார்.

இது தொடர்பாக அவருக்கும், வன்னியன் குடியிருப்பைச் சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வன்னியன் குடியிருப்பைச் சேர்ந்த தமிழரசன், அவரது சகோதரர் தங்கபாண்டி, அதே ஊரை சேர்ந்த மணி, சுரேந்தர் உள்பட 8 பேர் மோட்டார் சைக்கிள்களில் திருவரங்கநேரியில் உள்ள இசை ராஜா வீட்டிற்கு வந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெருமாளிடம் இசை ராஜா எங்கே என்று கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பெருமாளை கத்தியால் குத்தினர். இதனைத் தடுக்க வந்த பெருமாளின் மனைவி லட்சுமியையும் கீழே தள்ளித் தாக்கினர்.

பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றனர் அவ்வாறு செல்லும் போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சண்முகவேல் (55), மனோகரன் (42) ஆகியோரையும் கத்தியால் குத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

இது பற்றி ஏர்வாடி போலீசார், தமிழரசன் உள்பட 8 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேந்திரன் என்பவரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தமிழரசன் உட்பட 7 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.