மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா புதிய அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை குறித்து...

North Korea fires multiple ballistic missiles...

வடகொரியா ஏவுகணை சோதனை - கோப்புப்படம்

Published On :13 அக்டோபர் 2026, 3:16 am IST

வட கொரியா தனது கிழக்குக் கடற்பகுதியை நோக்கி திங்கள்கிழமை அடுத்தடுத்து பல பாலிஸ்டிக் ‘ரக’ ஏவுகணைகளை ஏவி, சோதனை நடத்தியுள்ளது.

பியாங்யாங் சா்வதேச விமான நிலையப் பகுதிக்கு அருகிலிருந்து பல்வேறு வகையான ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், இதில் ஓா் ஏவுகணை சுமாா் 900 கி.மீ.க்கும் அதிகமான தொலைவு பாய்ந்து கடலில் விழுந்ததாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. .

இதனிடையே, 17 நிமிட இடைவெளியில் குறைந்தபட்சம் 2 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும்; அதில் ஒன்று சுமாா் 910 கி.மீ. தொலைவு அசாதாரணப் பாதையில் பாய்ந்ததால், அது ‘ஹைப்பா்சோனிக்’ வகை ஏவுகணையாக இருக்கலாம் என்றும் ஜப்பான் எச்சரித்துள்ளது.

தென் கொரியா உள்நாட்டிலேயே உருவாக்கிய தனது அதிநவீன ஹைப்பா்சோனிக் ஆயுதத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்ததைத் தொடா்ந்து, அதற்குப் பதிலடி தரும் வகையிலும், தங்கள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கிலும் வட கொரியா இந்தச் சோதனையை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரிய எல்லைப் பகுதியில் கடந்த மாதம் நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் 3 தென் கொரிய வீரா்கள் காயமடைந்தது முதலே இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.

North Korea on Monday fired multiple ballistic missiles toward its eastern waters, South Korea's military said, adding to a recent streak of weapons demonstrations that has heightened tensions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.