மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா! இதுவரை 4,018 பேர் பலி!

காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவது பற்றி..

Ebola death toll

காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு - கோப்புப் படம் | AP

Published On :2 அக்டோபர் 2026, 3:21 pm IST

காங்கோவில், பரவி வரும் எபோலா பாதிப்புகளால் இதுவரை 4,000-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், எபோலா தொற்றின் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த மே 15 அன்று பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட புண்டிபுகியோ வைரஸ் தொடர்புடைய எபோலா பாதிப்புகளுக்கு இதுவரை எந்தவொரு தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி,

வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவும் எபோலா பாதிப்பாக இது மாறியுள்ள நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட 8,300 நோய்த் தொற்றுச் சம்பவங்களில் 4,018 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் புதிய சுகாதார மண்டலங்களுக்கும் வேகமாகப் பரவி வருவதால், ஏற்கெனவே குறைவாக உள்ள மருத்துவ வளங்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, உள்நாட்டு மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காங்கோவில் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகுந்த சவாலாக உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் உடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.

காங்கோவின் இடூரி மாகாணத்தில் மட்டும் அந்நாட்டில் கண்டறியப்பட்ட 90 சதவிகித எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.