காங்கோவில் எபோலா தொற்று: உயிரிழப்புகள் 5,000-ஐ கடந்தது!

காங்கோவில் எபோலா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது...

Ebola outbreak in Congo

எபோலா தொற்று சிகிச்சை மையம் - AP

Published On :1 நவம்பர் 2026, 2:12 am IST

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது.

இத்தொற்றால் இதுவரை 10,351 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களில் 5,026 போ் இறந்துள்ளனா். ஏறக்குறைய 50 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ள இந்த நோய், பிற ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவி வருவதால் பெரும் அச்சம் எழுந்துள்ளது.

கடந்த மே மாத மத்தியில் ‘புண்டிபுக்யோ’ வகை தீநுண்மி மூலம் தொடங்கிய இப்பரவல், உலக வரலாற்றில் 2-ஆவது மிகப் பெரிய பாதிப்பாக உருவெடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.