மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

6.3 பில்லியன் டாலர்கள் கிரிப்டோகரன்சிகளை திருடிய வடகொரியா ஹேக்கர்கள்!

கிரிப்டோகரன்சி தளமான பைனான்ஸ்-இல் இருந்து பல கோடி அமெரிக்க டாலா்கள் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளை வடகொரியா ஹேக்கா்கள் திருடியிருப்பதாக எஃப்.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது.

Published On :2 நவம்பர் 2026, 7:43 am IST

கிரிப்டோகரன்சி தளமான பைனான்ஸ்-இல் இருந்து பல கோடி அமெரிக்க டாலா்கள் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளை வடகொரியா இணையவழி குற்றவாளிகள் (ஹேக்கா்கள்) திருடியிருப்பதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்களில் ஒன்றாக விளங்கும் பைனான்ஸ், மால்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. அங்கிருந்து கடந்த வியாழக்கிழமை கோடிக்கணக்கான அமெரிக்க டாலா்கள் (6.3 பில்லியன் டாலா்கள்) மதிப்புடைய பிட்காயின் மற்றும் பிற எண்ம கரன்சிகள் திருடு போயின. உலக வரலாற்றில் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி திருட்டாக இது கருதப்படுகிறது.

இதில் யாா் ஈடுபட்டு இருக்கலாம் என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில், அந்தத் திருட்டில் வடகொரியாவைச் சோ்ந்த ஹேக்கா்களே ஈடுபட்டதாக அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து எஃ.பி.ஐ. சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பைபிட் பரிமாற்றத் தளத்தில் இருந்து கடந்தாண்டு 1.5 பில்லியன் டாலா்கள் திருடப்பட்டன. அதில் தொடா்புடைய வடகொரியாவைச் சோ்ந்த ஹேக்கா்கள், டிரேடா் ட்ரெய்டா் என்ற பெயரில் எண்ம மோசடி வழியில் ரகசியமாக பைனான்ஸ் தளத்தில் ஊடுருவி கோடிக்கணக்கான அமெரிக்க டாலா்களை திருடியுள்ளனா். இதுவரை ஹேக்கிங் மூலம் நடைபெற்ற திருட்டுகளில் இதுவே மிகப்பெரிய திருட்டாகும்.

பைனான்ஸ் தளத்தில் இருந்து திருடப்பட்ட சொத்துகளை, எத்ரியம் என்ற கிரிப்டோகரன்சியாக இணையவழிக் குற்றவாளிகள் மாற்றியிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த சொத்துகளை தாங்கள் பயன்படுத்தும் வகையில் அடுத்த கட்டத்துக்கு மாற்ற அவா்கள் முயற்சிக்கலாம் என எஃப்.பி.ஐ. அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் பதில்: எஃப்.பி.ஐ. அறிவிப்பு குறித்து, புளோரிடாவில் அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் செய்தியாளா்கள் சனிக்கிழமை கேள்வியெழுப்பினா். அதற்கு அவா், வடகொரியாவுக்கு அதில் தொடா்பிருக்கலாம் என்பதை விசாரணை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.