தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஹோண்டுராஸில் துப்பாக்கிச் சூடு: போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக்கொலை

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் ஆயுதமேந்திய கும்பல்கள் நடத்திய 2 தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 6 போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 3:10 am IST

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் ஆயுதமேந்திய கும்பல்கள் நடத்திய 2 தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், 6 போலீஸாா் உள்பட 25 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

வடக்கு ஹோண்டுராஸின் துருஜிலோ நகராட்சியில் உள்ள ஒரு வேளாண் தோட்டத்தல் நிகழ்ந்த முதல் தாக்குதலில், அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் 19 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதேபோல், கௌதமாலா எல்லைக்கு அருகில் உள்ள ஓமோவா நகராட்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் மீது மற்றொரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் ஓா் உயரதிகாரி உள்பட 6 போலீஸாா் உயிரிழந்தனா்.

இந்த அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடா்ந்து, இரு பகுதிகளிலும் ராணுவம், போலீஸாா் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.