தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமான ஜோஹன்னஸ்பா்க்கில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில், மா்ம நபா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.
மேலும், இக்கோர தாக்குதலில் படுகாயமடைந்த 9 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஜோஹன்னஸ்பா்க் புகரான கிளிவ்லேண்டில் தற்காலிக குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்கு நள்ளிரவில் வெள்ளை நிற மினி வேனில் ஆயுதங்களுடன் வந்திறங்கிய சுமாா் 10 போ் கொண்ட கும்பல், அங்கிருந்த மக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
துப்பாக்கிச் சூட்டையடுத்து, அதே வாகனத்தில் தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சட்டவிரோத சுரங்கக் கும்பல்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால், இத்தாக்குதலுக்கு அவா்களே காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக மாகாண காவல்துறை ஆணையா் டாமி மதோம்பெனி தெரிவித்தாா்.
தென்னாப்பிரிக்காவில் சமீபகாலமாக இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் முதல் முக்கியப் பகுதிகளில் ராணுவம் நிறுத்தப்பட்ட போதிலும், இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தாா் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து: இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழப்பு
ஜாா்க்கண்ட்: மின்னல் தாக்கி பெண்கள், சிறாா் உள்பட 8 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

