தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு

பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்துவதாக ரஷியா அறிவிப்பு...

News image

ரஷிய அதிபர் புதின். - ANI

Updated On :28 மார்ச் 2026, 11:09 am IST

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும்பொருட்டு பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி வருகிற ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.

ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போா் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அவ்வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நட்பு நாடுகளின் கப்பல்களை அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. ஆனால் ஈரான் நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று கூறியுள்ளது.

வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

வளைகுடா நாடுகளுக்குப் பதிலாக ரஷியாவில் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியா தற்போதைய நிலைமையை சமாளித்து வருகிறது. எனினும் இந்தியாவில் போதிய அளவு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.

இந்நிலையில்தான் ரஷியா ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்காசியப் போரால் ரஷியாவில் எரிபொருள் விநியோகத்தைச் சரிசெய்ய ஏப்ரல் 1 முதல் பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

உள்நாட்டில் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் எரிபொருள் விலைகளை நிலைப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷியா கூறியுள்ளது.

ரஷிய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

பிறநாடுகளில் ரஷிய எரிசக்திக்கான தேவை வலுவாக இருந்தாலும், மேற்கு ஆசியாவில் தொடரும் போரால் உலகளாவிய எண்ணெய், பெட்ரோலியப் பொருள்களின் விலைகளில் ஏற்ற. இறக்கங்களை ஏற்படுத்துகிறது என்றும் ரஷியாவில் விலை உயர்வதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு சுமார் 1,20,000 முதல் 1,70,000 பீப்பாய்கள் ரஷியா, பெட்ரோல் ஏற்றுமதி செய்து வருகிறது. சீனா, துருக்கி, பிரேசில், ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ரஷியாவிடம் இருந்து அதிகமாக பெட்ரோல் பெறுகின்றன.

ரஷியாவின் இந்த அறிவிப்பு நட்பு நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Russia to suspend gasoline exports amid efforts to secure domestic supplies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.