ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், ஈரானுக்கு உதவ தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் “பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் ஈரானின் நலன்களை ஆதரிக்கவும், மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்க உதவவும் ரஷியா தன்னால் இயன்றதைச் செய்யும்.
பிராந்தியத்தில் நிலைத்தன்மையையும் அமைதியையும் மேம்படுத்துவதில் ஈரான் மற்றும் பிற பிராந்திய நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் ரஷியா உறுதியாக உள்ளது. மேலும், ஈரான் தற்போதைய கடினமான சூழ்நிலையை வெற்றிகொண்டு, விரைவில் அமைதியை மீட்டெடுக்கும் என நான் நம்புகிறேன்” என புதின் தெரிவித்ததாக ஈரானிய அரசு ஊடகமான ‘ப்ரஸ் தொலைக்காட்சி’ தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பாஸ் அராக்சி, “நாங்கள் எப்போதும் ரஷியாவுடன் பிராந்திய பிரச்னைகள் குறித்து தொடர்ச்சியான இருதரப்பு கலந்தாய்வுகளை நடத்தி வருகிறோம்.
இந்தக் காலகட்டத்தில் போர் தொடர்பான நிகழ்வுகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து நமது ரஷிய நண்பர்களுடன் கலந்தாலோசிப்பதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
அண்மையில் பாகிஸ்தான் மற்றும் ஓமனுக்கு மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக ரஷியாவுக்கு அப்பாஸ் அராக்சி இந்தப் பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Russian President Vladimir Putin, meeting with Iranian Foreign Minister Abbas Araqchi, stated that he is ready to assist Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷிய அதிபர் புதினுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி: ஈரான்

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!

ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


