மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்?

மார்ச் 30 அன்று பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்...

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :28 மார்ச் 2026, 10:04 am IST

வருகிற மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தவெக தலைவர் விஜய் இன்று(மார்ச் 28) முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கவிருந்தார்.

இன்று பெரம்பூர் எம்கேபி நகர் பேருந்து நிறுத்தம் அருகே விஜய், பிரசாரத்திற்கு திட்டமிட்டிருந்த நிலையில், தவெக தேர்வு செய்த இடம் அசம்பாவிதத்துக்கு வழிவகுக்கும் என்று கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. வேறு இடத்தைத் தேர்வு செய்து காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பெரம்பூரில் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு திமுக அரசுதான் காரணம் என்று விஜய் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதல் என்றும் திமுக அரசின் அப்பட்டமான அடக்குமுறை என்றும் விமர்சித்தார்.

இதையடுத்து மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அதற்கு முன்னதாக மார்ச் 30 மதியம் 12 மணியளவில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே தாமதமாக விண்ணப்பித்ததால் நேற்று(மார்ச் 27) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறவிருந்த தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. நாளை(மார்ச் 29) காலை அதே இடத்தில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Summary

sources said Vijay files his nomination papers in Perambur on March 30th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.