சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளே (மார்ச் 30) பெரம்பூர் தொகுதியில் விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் அன்றே பிரசாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப். 2 ஆம் தேதி விஜய் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரம் செய்தார்.
இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரணான தகவல்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. அவர், தான் தொடர்புடைய வழக்கு ஒன்றை பெரம்பூர் வேட்புமனு தாக்கலில் குறிப்பிடவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து வழக்கு விவரத்துடன் புதிய பிரமாணப் பத்திரத்தை விஜய் சார்பில் தவெக மாவட்ட செயலாளர் சிவா, இன்று தேர்தல் அலுவலரிடம் அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Revised Nomination Paper Filed on Behalf of Vijay in Perambur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
பெரம்பூரில் ‘விசில்’ கோலமிட்டு வாக்கு சேகரித்த விஜய்!

பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்!
மார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



