ஐக்கிய அரபு அமீரகத்தில், இடைமறிக்கப்பட்ட ஈரான் ஏவுகணையின் பாகங்கள் விழுந்து இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கடந்த பிப்.28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை (மார்ச் 26) அன்று ஈரான் வீசிய பாலிஸ்டிக் ஏவுகணையை அந்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தகர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தகர்க்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் அபுதாபியின் ஸ்வைஹான் தெருவில் விழுந்ததில் இந்தியர் ஒருவரும், பாகிஸ்தானியர் ஒருவரும் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவத்தில், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போரால் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.
இத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்களில் இந்தியா, எகிப்து, சூடான், எத்தியோப்பியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Two people, including an Indian, have been reported killed after fragments of an Iranian missile exploded in the United Arab Emirates.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் போர் மீண்டும் வெடிக்கிறதா? ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல்!
ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! 5 இந்தியர்கள் படுகாயம்!

ஈரான் போர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் தாக்குதல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


