ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை (மே 8) பிற்பகல் வீசப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் தகர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்காத நிலையில், தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இன்று காலை ஹோர்முஸ் நீரிணையின் அருகில் உள்ள அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானிய ராணுவத்தின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்க படைகள் அறிவித்துள்ளன.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வந்தன.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் போர்நிறுத்த அறிவிப்பின்படி இருதரப்பும் தங்களது தாக்குதல்களை நிறுத்தின.
ஆனால், பாகிஸ்தான் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that another drone and missile attack has been carried out against the United Arab Emirates.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! 5 இந்தியர்கள் படுகாயம்!

அபுதாபி மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி!

ஈரான் போர்! ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் தாக்குதல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

