ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் படைகள் ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தாக்குதல் நடத்த முயன்ற ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தகர்த்து வீழ்த்தியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புப் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கெனவே, கடந்த பிப். 28 முதல் நடைபெற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி உள்பட 1,300-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been reported that Iranian forces have attacked the United Arab Emirates with drones and missiles.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் போர் மீண்டும் வெடிக்கிறதா? ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல்!
ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! 5 இந்தியர்கள் படுகாயம்!

அபுதாபி மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


