ஹோர்முஸ் நீரிணையை ஈரான் 48 மணி நேரத்துக்குள் திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
ஈரானுடனான போரில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் முயற்சியில் நட்பு நாடுகள் தங்களின் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். இருப்பினும், டிரம்ப்பின் கோரிக்கையை பெரிதாய் எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், அடுத்த 48 மணிநேரத்துக்குள் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில், ஈரானின் மின் உற்பத்தி கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஈரானின் பெரிய மின் உற்பத்தி கட்டமைப்பின் மீதுதான் முதல் தாக்குதல் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டுக் கப்பல்கள், அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியே அனுமதிக்க முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில்தான், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
Summary
Trump threatens to attack power plants over Strait of Hormuz
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
