அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க மார்ச் 31 ஆம் தேதிக்குள் முயற்சியை முன்னெடுக்கும் பணியை அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்கள் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பணியாற்றி வரும் டொனால்ட் டிரம்ப், 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தின்போதும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்கொண்டார். அதேபோலவே, மீண்டும் அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப் மீது, ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினர்கள் வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னதாக பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்ய முன்னெடுப்புகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களின் ஆதரவுக்கு இன்னும் இரண்டு வாக்குகள் குறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது தேவையற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை, அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி, டிரம்ப்பை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்தப் பதவி நீக்கத் தீர்மானத்தை அவர்கள் கொண்டு வரவுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இருந்து தலா இரண்டு பேர் வீதம், அமெரிக்க செனட் சபைக்கு 100 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் 53 பேரும், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 47 பேர் உள்ளனர். இதில், டிரம்ப்பை அதிபர் பதவியில் நீக்க ஜனநாயகக் கட்சியினருக்கும் இன்னும் இரண்டு ஆதரவு வாக்குகள் தேவையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, 2019, 2021 ஆம் ஆண்டில் அதிபராக இருந்தபோதும் டிரம்ப் மீது இரண்டு முறை பதவி நீக்கத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது மூன்றாவது முறையாக பதவி நீக்கத் தீர்மானம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதிபர் டிரம்ப்க்கு எதிரான பதவி நீக்கம் செய்ய 72 சதவிகிதம் வாய்ப்பிருப்பதாகவும், அவர் பதவி நீக்கப்பட்டால் பங்குச்சந்தைகள் பெரியளவில் பாதிப்புகளைச் சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.
Summary
Members of the US Senate have reportedly taken on the task of launching an effort to remove US President Donald Trump from office by March 31st.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
முடியும் தறுவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்
ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
