சௌதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் மிகப் பெரிய எரிசக்தி கட்டமைப்பான சௌத் பார்ஸ் எரிவாயு வயலின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலில், சௌத் பார்ஸ் எரிவாயு வயலிலிருந்த ஒரு எரிவாயு கிடங்கு மற்றும் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவைச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல், மிகவும் ஆபத்தானது எனக் கருதப்படும் நிலையில், கத்தார் உள்ளிட்ட நாடுகள் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி தகர்க்கப்படும் என புதன்கிழமை (மார்ச் 18) அன்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதில், சௌதி அரேபியாவின் சம்ரெஃப் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் ஜுபைல் பெட்ரோ கெமிக்கல் வளாகம் மீதும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் ஹசன் எரிவாயு வயல் மற்றும் கத்தாரின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran has warned of attacks on the energy infrastructure of Saudi Arabia, Qatar and the United Arab Emirates.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் போர் மீண்டும் வெடிக்கிறதா? ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது தாக்குதல்!
ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அபுதாபியில் இந்தியா் உள்ளிட்ட 2 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


