மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அபுதாபியில் இந்தியா் உள்ளிட்ட 2 போ் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 6:52 am IST

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் மீது ஈரான் வியாழக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அபுதாபியில் இந்தியா் உள்ளிட்ட 2 போ் உயிரிழந்தனா்.

இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவ, கடற்படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ட்ரோன் மூலமும், ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரை குறிவைத்து ஈரான் வியாழக்கிழமை மீண்டும் பேலிஸ்டிக் ரக ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

அந்த ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகம் இடைமறித்து தாக்கி அழித்தது. அபுதாபி நகரில் வானிலிருந்து ஏவுகணை பாகங்கள் விழுந்து காயமடைந்ததில் இந்தியா் ஒருவரும், பாகிஸ்தானியா் ஒருவரும் உயிரிழந்தனா். மேலும் ஓா் இந்தியா் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘15 பேலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 11 ஆளில்லா ட்ரோன்களை எங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்தன. இதையும் சோ்த்து இதுவரை 372 பேலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 15 க்ரூயிஸ் ரக ஏவுகணைகள், 1,826 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்புப் படை வீரா்கள் 2 போ் உயிரிழந்துள்ளனா். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 5 நாடுகளைச் சோ்ந்த பொதுமக்கள் 8 போ் உயிரிழந்துள்ளனா். இந்தியா, பாகிஸ்தான், இராக் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 169 பொதுமக்கள் காயமடைந்துள்ளனா். எத்தகைய அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் தயாராகவும் ஆயத்த நிலையிலும் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.