சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மானை பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து சௌதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஈரானின் தாக்குதல்கள் குறித்து சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் மற்றும் பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் சனிக்கிழமை (மார்ச் 7) நேரில் சந்தித்து உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சௌதி அரேபியாவின் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டதாக, அந்நாட்டு அரசின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இதுபற்றி பாகிஸ்தான் அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
கடந்த 2025 செப்டம்பரில், சௌதி அரேபியா மற்றும் அணு ஆயுத சக்தி கொண்ட பாகிஸ்தான் இடையில் ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்ததின் அடிப்படையில், இருநாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான தாக்குதல் மற்றொன்றின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Saudi Arabia's Defense Minister Khalid bin Salman met and held talks with Pakistan's Army Chief General Asim Munir.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! பாக். ராணுவத் தளபதியுடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!

அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

