அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீர் தெஹ்ரானில் ஈரானிய அதிகாரிகளை வியாழக்கிழமை (ஏப்.16) சந்தித்தார்.
கடந்த ஏழு வாரங்களாக நடைபெற்று வரும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வழிவகுப்பதற்காக நேற்று ஈரான் சென்ற பாகிஸ்தான் ராணுவத்தளபதி தெஹ்ரானில் அதிகாரிகளை இன்று சந்தித்துள்ளார்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்துவருகிறது. இதன் ஒருபகுதியாக இஸ்லாமாபாதில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.
இதனிடையே, ஈரானுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாதில் நடைபெற வாய்ப்புள்ளது என அமெரிக்கா தெரிவித்தது. இருப்பினும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
முன்னதாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் லெபனான்-இஸ்ரேல் இடையே செவ்வாய்க்கிழமை (ஏப்.13) நடந்த பேச்சுவாா்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்தது.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சௌதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு புதன்கிழமை (ஏப். 15) அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
Summary
To take peace talks to the next stage, Pakistan's Army Chief, General Asim Munir, met with Iranian officials in Tehran on Thursday (April 16).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதிப்பேச்சு! பாக். ராணுவத் தளபதியுடன் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

அமைதிப்பேச்சு! ஈரான், துருக்கியில் இருந்து நாடு திரும்பும் பாக். பிரதமர், ராணுவத் தளபதி!

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

