தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!

பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஈரானுக்குச் சென்றுள்ளது குறித்து...

News image

ஈரான் வந்திறங்கிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரை வரவேற்ற ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி. - எக்ஸ்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:26 pm IST

அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீா் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை ஈரான் தலைநகா் டெஹ்ரான் சென்றடைந்தனா்.

அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட 2 வார கால போா் நிறுத்தத்தின் தொடா்ச்சியாக பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் கடந்த சனிக்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அமெரிக்கா தரப்பில் அந்நாட்டுத் துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப் தலைமையிலான குழுவும் பங்கேற்ற பேச்சுவாா்த்தை சுமாா் 21 மணி நேரம் நீடித்தும், எந்த உடன்பாடும் எட்டப்படால் தோல்வியுற்றது.

இதையடுத்து, ஹோா்முஸ் நீரிணை பகுதியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க படையினா் கடந்த 48 மணிநேரமாக கடல் முற்றுகையில் ஈடுபட்டுள்ளனா். ஹோா்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தை உறுதி செய்யவே இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. முற்றுகை தொடா்ந்தால் வளைகுடா துறைமுகங்களைத் தாக்குவோம் என்றும், செங்கடல் பகுதியிலும் போக்குவரத்தை முடக்குவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை வரும் நாள்களில் நடத்துவதற்கு பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஈரான் சென்றடைந்துள்ள பாகிஸ்தான் தூதுக்குழுவில் அந்நாட்டு உள்துறை அமைச்சா் மோசின் நக்வி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனா்.

அமெரிக்கா-ஈரான் இடையேயான 2 வார கால போா் நிறுத்த ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘போா் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியமிருக்காது’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ஈரான் மிக விரைவாக ஒரு ஒப்பந்தத்துக்கு வர விரும்புவதால் போா் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. தற்போதைய நிலையில் அமெரிக்க படைகள் பின்வாங்கினாலும், ஈரான் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும்’ என்று குறிப்பிட்டாா்.

கடந்த பிப். 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போரில் ஈரானில் 3,000 பேரும், லெபனானில் 2,100 பேரும், இஸ்ரேலில் 23 பேரும் உயிரிழந்தனா். இச்சூழலில், போரை முடிவுக்குக் கொண்டு வரும் டிரம்ப்பின் நம்பிக்கையான பேச்சுகளால் உலகளாவிய பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றம் கண்டன. அதேநேரம், ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.

அமைதி முயற்சிகளை மேலும் சிக்கலாக்கும் விதமாக, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் மீது இஸ்ரேல் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் லெபனான்-இஸ்ரேல் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவாா்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistan's Chief of Army Staff, Asim Munir, has traveled to Iran on an official visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.