ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என ஈரானிய அரசு உறுதியளித்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் போரில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கின.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என ஈரானிய அரசு தனக்கு உறுதி அளித்திருப்பதாக, அதிபர் டிரம்ப் இன்று (ஜூன் 24) பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம் எந்தவிதமான சுங்கக் கட்டணங்களையோ, காப்பீட்டுக் கட்டணங்களையோ அல்லது வேறு எந்தக் கட்டணங்களையோ கோரவோ பெறவோ இல்லை என்பதை ஈரானிய அரசு அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தவறான மற்றும் குழப்பத்தை விளைவிக்கும் செய்திகள் பரப்பப்பட்டாலும் இதுவே உண்மை” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பதில் வழங்கப்படும் சேவைகளுக்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக, ஈரான் மற்றும் ஓமன் அரசுகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Trump has posted that the Iran has assured that ships passing through the Strait of Hormuz will not be charged a toll.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்தியக் கப்பல் திஷா! ஜூன் 18 இந்தியா வந்தடையும்!
அமெரிக்க தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடல்! - ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

