வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அமெரிக்க தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடல்! - ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுவதுமாக மூடப்படுகிறதாக ஈரான் அரசு அறிவிப்பு...

News image

ஹோர்முஸ் நீரிணை - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:49 pm IST

அமெரிக்க படைகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுவதுமாக மூடப்படுகிறதாக, ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 8) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தின.

இதற்குப் பதிலடியாக ஈரானிய கட்டமைப்புகள் மீது அமெரிக்க படைகள் தாக்கியதால், ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுவதாக, ஈரானிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. இதனால், மீண்டும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து, பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரிகள் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“அமெரிக்க படைகளின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் கடந்த இரவு ஈரானிய படைகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுவதுமாக மூடப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்காக விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ள கப்பல்கள் ஈரானிய படைகளிடம் இருந்து வரும் அறிவுறுத்தல்களுக்குப் பொறுமையுடன் காத்திருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Iran has announced that the Strait of Hormuz is being completely closed until further notice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.