பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை வழியாக எதிரி நாடுகளின் ராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கு மீண்டும் அனுமதி அளிக்க முடியாது

News image

துணை அதிபர் முகம்மது ரேசா ஆரிஃப் - ஏஎன்ஐ

Updated On :17 மே 2026, 4:20 pm IST

ஹோர்முஸ் நீரிணை வழியாக எதிரி நாடுகளின் ராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்வதற்கு மீண்டும் அனுமதி அளிக்க முடியாது என ஈரான் முதல் துணை அதிபர் முகம்மது ரேசா ஆரிஃப் இன்று (மே 17) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

''ஹோர்முஸ் நீரிணையில் எங்கள் உரிமையை இறையாண்மையை விட்டுக்கொடுத்திருந்தோம். எங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் எதிரி நாட்டு ராணுவ உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி அளித்திருந்தோம். மீண்டும் அதனை எங்களால் அனுமதிக்க முடியாது'' எனக் குறிப்பிட்டார்.

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு தலைவர் இப்ராஹிம் அஸிஸ், ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல்சார் போக்குவரத்தை சீராக கண்காணிக்க தொழில்முறை வழிமுறையை வகுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை (நேற்று) கூறியிருந்தார். இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச வணிகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ஈரானின் தேசிய இறையாண்மை கட்டமைப்புக்கு உட்பட்டும் இதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இப்ராஹிம் அஸிம் பகிர்ந்துள்ளார்.

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் தேசிய பாதுகாப்புக் குழு ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கான வழிமுறைகளை வகுக்கவுள்ளது.

Summary

We will not permit that again Iran warns against transit of 'enemy' weapons through Strait of Hormuz

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.