ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை, திறந்தே உள்ளது என்று அமெரிக்க மத்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 8) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தின.
இதற்குப் பதிலடி தரும் வகையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடர்ந்தது. இதனால், உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக மூடியதாக ஈரானிய புரட்சிகர காவல்படை வியாழக்கிழமை (ஜூன் 11) அறிவித்தது. மேலும், இந்தத் தடையை மீறி ஹோர்முஸ் வழியாக செல்லும் கப்பல்கள் அழிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
ஏற்கெனவே, ஹோர்முஸ் நீரிணை வழக்கம் போல் செயல்படாமல் உள்ளதால் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வருகிறது. இது மாதிரியான ஈரானின் அறிவிப்புகள் கச்சா எண்ணெய்யின் விலையை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க மத்திய ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்கும் முயற்சியில், ஈரான் பல டிரோன் விமானங்களை ஏவியது. அந்த நீரிணை வழியாகப் போக்குவரத்து தடையின்றித் தொடர்வதால், அமெரிக்கப் படைகள் கடந்த சில மணிநேரங்களில் அவை அனைத்தையும் சுட்டு வீழ்த்தின. ஆகையால், இந்த சர்வதேச வர்த்தக வழித்தடம் போக்குவரத்துக்காக திறந்தே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
Summary
The US Central Command has stated that the Strait of Hormuz, which Iran announced it had closed, remains open.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்க தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடல்! - ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்!

ஹோர்முஸ் நீரிணைக்கு சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது! - டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் கறார்!
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

