சாதி குறித்து அவதூறாகப் பேசியதற்காக மத்திய இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டூ, பஞ்சாப் மாநில பட்டியலினர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியுள்ளார்.
மத்திய ரயில்வே துறையின் இணையமைச்சரான ரவ்நீத் சிங் பிட்டூ, கடந்த மே 26 அன்று காவல் துறை அதிகாரி உடனான வாக்குவாதத்தில் அவரின் சாதி பெயரைக் கூறி அவதூறாகப் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்தச் சம்பவம் முழுவதும் பதிவான விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தனது பேச்சுக்காக மத்திய இணையமைச்சர் பிட்டூ பொது மன்னிப்பு கோரியிருந்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்குப் பஞ்சாப் மாநில பட்டியலினர் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், 2 முறை ஆஜராகமல் தவிர்த்து வந்த மத்திய இணையமைச்சர் பிட்டூ இன்று (ஜூன் 24) பஞ்சாப் பட்டியலினத்தவர் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகி தனது தவறை ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்.
அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்ட ஆணையம், ரவ்நீத் சிங் பிட்டூவை பில்லூரில் உள்ள தேரா பாபா பிரம்மதாஸ், குரு ரவிதாஸ் மகராஜுடன் தொடர்புடைய தேரா சச்கந்த் பாலன், ஜலந்தரில், பகவான் வால்மீகி தீரத் ஸ்தலம் மற்றும் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ தர்பார் சாஹிப் ஆகிய நான்கு வழிப்பாட்டுத் தலங்களுக்குச் சென்று மரியாதைச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
Summary
Union Minister of State Ravneet Singh Bittu has appeared before the Punjab Commission for SC and tendered an apology for making casteist remarks.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகரான ரன்வீர் சிங்!

யோகாவை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றுவோம்: ராஜ்நாத் சிங்

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

தனியார் பள்ளிகளில் 5% வரை கட்டணம் உயர்த்தலாம்: பஞ்சாப் அரசு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை


