லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டதாக ஈரான் ராணுவம் சனிக்கிழமை (ஜூன் 20) அறிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்பட்டதையடுத்து போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தில் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை (ஜூன் 17) இரவு கையொப்பமிடப்பட்டது.
இந்த அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியானும் கையொப்பமிட்டனர். இதனைத் தொடர்ந்து, ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிராக அந்நாட்டின் தெற்கு மாகாணங்களின் மீது வியாழக்கிழமை (ஜூன் 18) இரவு முதல் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
இந்தத் தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்படுவதாக ஈரான் ராணுவம் இன்று அறிவித்துள்ளது.
உலகளவில் முக்கிய எண்ணெய்வழிப்போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணை வழக்கம்போல் செயல்படாமல் இருந்ததால், ஏற்கெனவே உலகின் பல நாடுகளில் எரிபொருள் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்தது. இந்த நிலையில், ஒப்பந்தத்துக்குப் பிறகும் தாக்குதல்கள் நடைபெறுவது ஈரான் - அமெரிக்கா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை பாதிப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Iranian military announced on Saturday (June 20) that the Strait of Hormuz has been blocked again due to the attack launched by Israel on Lebanon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதி ஒப்பந்தம்! ஹோர்முஸ் திறப்பு, அமெரிக்க முற்றுகை நீக்கம்! - பாகிஸ்தான் அறிவிப்பு
ஈரான் மூடியதாக அறிவித்த ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது! - அமெரிக்கா
அமெரிக்க தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடல்! - ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

