சிறையில் உள்ள பாக். முன்னாள் பிரதமருக்கு சட்ட ரீதியான உரிமைகள் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சட்டரீதியான அரசியலமைப்பு உரிமைகள் மறுக்கப்படுவதாக கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைமை குற்றம் சாட்டியுள்ளது.
முறையான மருத்துவ வசதிகள் கூட இருவருக்கும் மறுக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வழக்குகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். அவரது மனைவி புஷ்ரா பீவி வீட்டுச் சிறையில் இருந்த நிலையில், 2024 மே முதல் அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் முக்கிய தலைவரும் கைபர் பக்துன்வா மாகாண அமைச்சருமான ஷஃபி ஜன் இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசுகையில், “இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியும் உறவினர்கள் அல்லது கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.
கண் பாதிப்பால் கடந்த 4 மாதங்களாக இம்ரான் கான் அவதிப்பட்டு வருகிறார். அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு நள்ளிரவில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது சிறை விதிகளை மீறும் செயல். 3 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், அவர்களின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விவரங்கள் எதுவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ பகிரப்படவில்லை.
அவர்கள் இருவரும் தங்களது தனிப்பட்ட மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். முழுமையான பரிசோதனைக்கு உடனடியாக ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு அவர்கள் இருவரும் அனுப்பி வைக்கப்படவேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
கட்சியின் நிறுவனரான இம்ரான் கானுடனான சந்திப்புகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அரசு தொடர்ந்து இம்ரான் கானைச்சந்திக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பது நீதித்துறை உத்தரவுகளை அவமதிப்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்..
Summary
Former Pakistan PM Imran Khan and his wife denied rights in prison!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கணவா், மாமனாரை கொன்று எரித்த வழக்கு: பெண், அவரது நண்பா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

61 வயதில் தனது 3-ஆவது திருமண தேதியை உறுதிப்படுத்திய ஆமிர் கான்!

சல்மான் கான் - நயன்தாரா படத்தில் 4 இசையமைப்பாளர்கள்?
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

