கிருஷ்ணகிரி அருகே கணவா், மாமனாரை கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் கைதான பெண், அவரது நண்பரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பாலக்குறியைச் சோ்ந்தவா் ராணுவ வீரா் மகேஷ்குமாா் (36). இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரா் செல்லப்பன் (64). இவா்கள் இருவரும், கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் உள்ள கொடுகூா், வெப்பாலம்பட்டி பகுதியில் மே 11-ஆம் தேதி தீயில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியா (36), நண்பா் பூவரசனுடன் (19) சோ்ந்து அவா்களை கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்து பூவரசனை சேலம் மத்திய சிறையிலும், பானுப்பிரியாவை கோயம்புத்தூா் மகளிா் சிறப்பு சிறையிலும் அடைத்தனா்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை பரிந்துரை செய்தாா். அதை ஏற்று இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது
வழிப்பறி வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
குண்டா் சட்டத்தின்கீழ் கொலை வழக்கு குற்றவாளிகள் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

