மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுடனான சந்திப்பு குறித்து நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி...

News image

9/11 நினைவிடத்தில் பிரிட்டன் மன்னரை சந்தித்து உரையாடிய நியூ யார்க் மேயர் மம்தானி - AP

Updated On :30 ஏப்ரல் 2026, 10:21 am IST

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுடனான சந்திப்பின்போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பியளிக்க அவரிடம் கோரிக்கை வைப்பேன் என்று நியூ யார்க் மேயரும் இந்திய வம்சாவளியுமான ஸோரான் மம்தானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், செவ்வாயன்று காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்தில் அவர் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், இரண்டாம் நாள் பயணமாக நியூ யார்க் நகருக்கு சென்றுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ், 9/11 நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே, இன்றிரவு மன்னர் மூன்றாம் சார்லஸை நேரில் சந்திக்கும்போது அவரிடம் என்ன கோரிக்கை வைக்க போகிறீர்கள் என்று நியூ யார்க் மேயர் மம்தானியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மம்தானி, “அவரிடம் தனியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால், கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திருப்பி அளிக்குமாறு கோரிக்கை வைப்பேன்” என்றார்.

கோஹினூர் வைரம் 105.6 காரட் எடைகொண்ட உலகிலேயே மிகவும் பொக்கிஷமாக வைரமாகப் பார்க்கப்படுகிறது. இது 14ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த வைரத்தை காலனி ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பிரிட்டன் முன்னாள் அரசி விக்டோரியாவுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.

இந்த வைரத்தை திருப்பி அளிக்குமாறு பிரிட்டனிடம் இந்தியா தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

NYC mayor Mamdani says he will 'encourage' King Charles to return Koh-i-Noor diamond to India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.