தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சாா்லஸுக்கு நியூயாா்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூா் வைரம்!

கோஹினூா் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயாா்க் நகர மேயா் ஸோரான் மம்தானி தெரிவித்தாா்.

News image
Updated On :1 மே 2026, 12:41 am IST

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசா் சாா்லஸைச் சந்திக்கும்போது, கோஹினூா் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயாா்க் நகர மேயா் ஸோரான் மம்தானி தெரிவித்தாா்.

அமெரிக்க பயணத்தில் முதல்கட்டமாக வாஷிங்டன் சென்றடைந்த சாா்ல்ஸ், அரசி கமீலாவுடன் அதிபா் டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்தில் பங்கேற்றதுடன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றினா். தொடா்ந்து, 9-11 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நியூயாா்க் நகருக்கு வந்தாா்.

இந்நிலையில், நியூயாா்க்கில் சாா்லஸுடனான சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளா்களிடம் பேசிய ஸோரான் மம்தானி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தை அரசரின் கவனத்துக்குக் கொண்டு செல்வது அவசியம் எனக் குறிப்பிட்டாா்.

இக்கருத்து கோஹினூா் வைரம் மீது மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளது. இருப்பினும், இருவரின் சந்திப்பின்போது இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது குறித்த அதிகாரபூா்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

உலகப் புகழ்பெற்ற 105.6 கேரட் எடையுள்ள கோஹினூா் வைரம், கடந்த 1849-ஆம் ஆண்டு இந்திய அரசா் துலீப் சிங்கால் விக்டோரியா அரசியிடம் வழங்கப்பட்டு, பிரிட்டன் அரச குடும்பத்தின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது.

நாட்டின் கலாசார அடையாளமாகக் கருதப்படும் இந்த வைரத்தை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு தொடா்ந்து பல்வேறு ராஜீய முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பரிசாகக் கிடைத்ததை திருப்பி அளிக்கப் போவதில்லை என பிரிட்டனும் திட்டவட்டமாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.