திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

ஈரானுடனான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடுவேன்: டிரம்ப்

ஈரானுடனான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தது பற்றி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - கோப்புப் படம்.

Updated On :16 ஜூன் 2026, 9:31 pm IST

ஈரானுடனான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:

ஈரானுடனான முழுமையான ஒப்பந்த ஆவணத்தை நான் விரைவில் வெளியிடுவேன். அதைச் செய்வதற்கு முன், முதலில் ஒரு முறையான ஏற்பாட்டை செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால், அதை வெளியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது ஒரு சிறந்த ஆவணம்.

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது. நான் ஒரு செய்தியளர் சந்திப்பை நடத்தி, அந்த அறிக்கையை கேமரா முன்பு, முழுவதுமாக வாசித்துக் காட்டுவேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானதாகவும் வரும் ஜூன் 19 ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

ஜி7 மாநாடு என்பது உலகப் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள ஏழு நாடுகளின் தலைவர்கள், ஆண்டுதோறும் கூடி சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் ஒரு அமைப்பாகும்.

Summary

US President Donald Trump stated on Tuesday (June 16) that he would soon release the report on the agreement with Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.